பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ரேஷன் கடை அவசியம்குஜிலியம்பாறை: கூம்பூர் - புளியம்பட்டி ரோட்டில் மூன்றாவது கி.மீ., துாரத்தில் ராஜபுரம், கணக்கப்பிள்ளையூர் உள்பட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர் ரேஷன் பொருள் வாங்க கூம்பூர் செல்கின்றனர். பின் பொருட்களை தலைச் சுமையாக கொண்டு வருகின்றனர்.பெரும்பாலான வீடுகளில் முதியோரே உள்ளதால் ரேஷன் கடை செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, பாறைப்பட்டியை மையாக வைத்து ஆறு

ரேஷன் கடை அவசியம்குஜிலியம்பாறை: கூம்பூர் - புளியம்பட்டி ரோட்டில் மூன்றாவது கி.மீ., துாரத்தில் ராஜபுரம், கணக்கப்பிள்ளையூர் உள்பட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர் ரேஷன் பொருள் வாங்க கூம்பூர் செல்கின்றனர். பின் பொருட்களை தலைச் சுமையாக கொண்டு வருகின்றனர்.பெரும்பாலான வீடுகளில் முதியோரே உள்ளதால் ரேஷன் கடை செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, பாறைப்பட்டியை மையாக வைத்து ஆறு ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும்.மணல் லாரி பறிமுதல்வடமதுரை: மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிக்குமார் மற்றும் அதிகாரிகள் பாடியூர் கூட்டாத்துப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த டிப்பர் லாரியை மடக்கினர். டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சந்தனவர்த்தினி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். டிரைவரை தேடி வருகின்றனர்.காதலர்கள் தஞ்சம்திண்டுக்கல்: வேடசந்துாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜ்கோகுல் 22, தாடிக்கொம்பை சேர்ந்த கல்லுாரி மாணவி பிரமிளா 23, இருவரும் காதலித்தனர். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட இவரும், நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதே போல் மேலும் 2 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சமடைந்தனர்.குழாய் பதிக்க பூமி பூஜைஒட்டன்சத்திரம்: சின்னக்காம்பட்டியில் இருந்து மார்க்கம்பட்டிக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. வாடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஜோதீஸ்வரன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் செல்வி, ஜென்சி, சின்னக்காம்பட்டி ஊராட்சி தலைவர் நிறைமதி, தி.மு.க., வடக்கு ஒன்றிய பொருளாளர் செல்லமுத்து பங்கேற்றனர்.தற்கொலைஒட்டன்சத்திரம்: ஸ்ரீராமபுரம் கட்டயகவுண்டன்புதூரைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி பிருமாயி 56, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி அதிகமாகவே விஷ விதையை சாப்பிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மூன்று பேர் கைதுதிண்டுக்கல்: மைசூர் - துாத்துக்குடி ரயிலில் மதுபாட்டில்களை கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை ரயில் திண்டுக்கல் வந்ததும் போலீசார் சோதனையிட்டனர். மதுபாட்டில் வைத்திருந்த சோழவந்தான் பாஸ்கரனை 52, கைது செய்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மற்றொரு ரயிலில் பிலாத்து சந்திரமோகன் 30, பட்டிவீரன்பட்டி கார்த்திகேயனிடம் 24, இருபது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X