அரசியல் செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வர் முழு முயற்சி: உதயநிதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:தி.மு.க., சார்பில், 'தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.சிங்காநல்லுார் தொகுதி, மசக்காளிபாளையத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதி அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி என, 14 வகை பொருட்கள் வழங்கினார்.முதற்கட்டமாக, 'டோக்கன்' வழங்கப்பட்ட, 200 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில்,

கோவை:தி.மு.க., சார்பில், 'தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.சிங்காநல்லுார் தொகுதி, மசக்காளிபாளையத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதி அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி என, 14 வகை பொருட்கள் வழங்கினார்.முதற்கட்டமாக, 'டோக்கன்' வழங்கப்பட்ட, 200 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், வீடு, வீடாக சென்று அப்பகுதி முழுவதும், இப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.நிகழ்ச்சியில், அப்பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்ஹர்ஷித், உண்டியலில் தான் சேமித்து வைத்திருந்த, 1,945 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு, உதயநிதியிடம் வழங்கினார்.முன்னதாக, புலியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிருபர்களிடம் உதயநிதி கூறுகையில், ''மதுரையில் வெகு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளநிலையில், அதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார்,'' என்றார்.அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X