பொது செய்தி

தமிழ்நாடு

பழநி ஹிந்து முன்னணியினர் கண்டனம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பழநி : ராமநாதபுர மாவட்டத்தில் ஹிந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி பிரசாரம் செய்ததற்கு பழநி ஹிந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர். மதுரை கோட்ட செயலாளர் பாலன் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவியுள்ளது. இதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமே.ஆனால் தற்போது அரசு அதிகாரிகள், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு

பழநி : ராமநாதபுர மாவட்டத்தில் ஹிந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி பிரசாரம் செய்ததற்கு பழநி ஹிந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர்.

மதுரை கோட்ட செயலாளர் பாலன் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவியுள்ளது. இதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமே.ஆனால் தற்போது அரசு அதிகாரிகள், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வது கண்டிக்கத்தக்கது.ஹிந்து கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது கிடையாது. அதேசமயம் பிற மதத்தினர் வழிபாட்டு தலங்களில் வழிபடுகின்றனர்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஹிந்து தெய்வங்களை மட்டுமே பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்வது ஹிந்து மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X