அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி பங்கேற்ற விழாவில் 'கொரோனாவுக்கு அழைப்பு'

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
வால்பாறை:நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில், தி.மு.க.,வினர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து, 'கொரோனாவுக்கு அழைப்பு' விடுத்தனர்.கோவை மாவட்டம், வால்பாறையில், 'கிரீன ஹில்ஸ்' கலையரங்கில், தி.மு.க., சார்பில் ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, வால்பாறை அரசு
 உதயநிதி பங்கேற்ற விழாவில் 'கொரோனாவுக்கு அழைப்பு'

வால்பாறை:நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில், தி.மு.க.,வினர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து, 'கொரோனாவுக்கு அழைப்பு' விடுத்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில், 'கிரீன ஹில்ஸ்' கலையரங்கில், தி.மு.க., சார்பில் ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உதயநிதி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட கட்சியினரும், பொதுமக்களும் திரண்டனர். இதனால், சிறிய கலையரங்கில் மக்கள் கூட்டம் முண்டியடித்தது.மேடையில் உதயநிதியை சந்திக்க கூட்டம் திரண்டது. பலர், 'செல்பி' எடுக்க மேடையில் புகுந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சமூக இடைவெளி இல்லாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
13-ஜூன்-202103:50:45 IST Report Abuse
Siva Kumar விடியலை நோக்கி செல்லும்போது இதெல்லாம் கண்டுக்காமே இருக்கணும்னுதான் டாஸ்மாக்க தொறந்து விட்டிருக்கோம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202122:12:22 IST Report Abuse
தமிழவேல் கலையரங்கம் திறந்த வெளியில்தான் நடக்குது ? அதுவும் எல்லாமே மாஸ்க் கோட வந்திருக்கே ? தேர்தல் கூட்டத்தில மோடிஜி, மாஸ்க்கும் இடைவெளியும் இல்லாமலேயே பக்கத்தில இருக்கிறவங்களோட கையைக் காலைத் தூக்கி (அதுவும் வெறும் கையேடு) காண்பிக்கல ? இவனுவோ இதுபோல கூட்டம் கூட்டினது தப்புதான். இதுங்களுக்கு பட்டாதான் தெரியும்.
Rate this:
13-ஜூன்-202107:12:47 IST Report Abuse
மனுநீதிதேர்தல் பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் மாஸ்க்கோட போயிருந்தால் முகமூடி கொள்ளைகாரர் போல் பொருத்தமாக இருந்திருக்கும். பிரச்சார காலத்திற்கும், இப்போது இருக்கும் நிலைமைக்கும் வித்தியாசம் தெரியாத நீர் நிரந்தர அடிமை தான். மோடி கிணற்றில் விழுந்தால் ஸ்டாலினையும், அவர் மகனையும் சேர்த்து தள்ளுவீர்களா?!...
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
12-ஜூன்-202121:36:14 IST Report Abuse
venkates இது தான் திராவிட அரசியல்,,,விடியல்? இவர்களால் மற்றவர்களுக்கும் பரவுமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X