பொது செய்தி

தமிழ்நாடு

'இன்னும் பத்தே நாள்தான்... கொரோனா குறைந்து விடும்!'

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:''கோவையில் அடுத்த பத்து நாட்களில், கொரோனா பாதிப்பு குறையும்,'' என, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.கோவையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம், கடந்த மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை உச்சத்தில் இருந்தது. தற்போது, படிப்படியாக குறைந்து வந்தாலும், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில், கோவைதான் முதலிடத்தில் உள்ளது.கடந்த சில

கோவை:''கோவையில் அடுத்த பத்து நாட்களில், கொரோனா பாதிப்பு குறையும்,'' என, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.கோவையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம், கடந்த மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை உச்சத்தில் இருந்தது. தற்போது, படிப்படியாக குறைந்து வந்தாலும், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில், கோவைதான் முதலிடத்தில் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை, தினசரி பாதிப்பு 4,500க்கும் மேல் இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, மெல்ல குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த, 10 நாாட்களுக்குள் மேலும் குறையும் என, சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், ''கோவையில், வீட்டு தனிமைப்படுத்துதல் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் நபர்கள் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.இதன் மூலம், கொரோனா பலி எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. தவிர, பாதிப்பு உள்ள பகுதிகளில் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், அடுத்த 10 நாட்களுக்குள் பாதிப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X