பொது செய்தி

தமிழ்நாடு

வன குற்றங்களை கண்டறிய 'சிப்பிப்பாறை' ரக நாய்கள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் வன குற்றங்களை கண்டறிய, 'சிப்பிப்பாறை' இனத்தைச் சேர்ந்த இரு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வனத்தில் சந்தனம், ஈட்டி மரங்களை வெட்டி கடத்துவது, வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது போன்ற வன குற்றங்கள் நடக்கின்றன. இவற்றை கண்டறியும் பொருட்டு, புலிகள் காப்பகங்கள், வன சரணாலயங்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்த நடவடிக்கை
 வன குற்றங்களை கண்டறிய  'சிப்பிப்பாறை' ரக நாய்கள்

ஊட்டி:நீலகிரியில் வன குற்றங்களை கண்டறிய, 'சிப்பிப்பாறை' இனத்தைச் சேர்ந்த இரு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி வனத்தில் சந்தனம், ஈட்டி மரங்களை வெட்டி கடத்துவது, வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது போன்ற வன குற்றங்கள் நடக்கின்றன. இவற்றை கண்டறியும் பொருட்டு, புலிகள் காப்பகங்கள், வன சரணாலயங்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த, ஆறு மாதமான இரு நாய் குட்டிகள், நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுஉள்ளன.

நாய்களுக்கு, தமிழ்நாடு வன பயிற்சி மையத்தில் வைத்து, மூன்று மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டது.வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை கண்டறிதல் மற்றும் வன குற்றங்களை கண்டறியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், ''தமிழகத்தை தாயகமாக கொண்ட நாய்களை, வன குற்றங்களை கண்டறிய பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். ''இவை பயிற்சிகளை, நாய்கள் சுலபமாக கற்று கொண்டன. இவை, வன பாதுகாப்பில் கூடுதல் பலம் சேர்க்கின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X