பொது செய்தி

தமிழ்நாடு

80 கோடி ரூபாயை எண்ணி வைங்க: மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கடிதம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்கு நிலுவையில் உள்ள, 80 கோடி ரூபாயை விடுவிக்க, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயமுத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:கோவை மாநகராட்சி பகுதிகளில், கடந்த நான்கு மாதமாக முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கான பில்கள், ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளன.

கோவை:கோவை மாநகராட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்கு நிலுவையில் உள்ள, 80 கோடி ரூபாயை விடுவிக்க, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயமுத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:கோவை மாநகராட்சி பகுதிகளில், கடந்த நான்கு மாதமாக முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கான பில்கள், ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளன. ரூ.80 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்ட பில்களுக்கு தொகை வழங்கப்படாமல், நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்., முதல் பில் தொகை கோப்புகளில், கமிஷனர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் காலம் என்பதால், பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொய்வின்றி செய்து வருகின்றனர்.கமிஷனர் குமாரவேல் பாண்டியனை, இட மாறுதல் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது காலத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல், பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால், ஒப்பந்த நிறுவனத்தினர் நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.நீண்ட காலமாக, மாநகராட்சி பணிகளை செய்து வரும், ஒப்பந்த நிறுவனங்கள் இனி தொடர்ந்து செய்ய முடியாத சூழல் உருவாகி விடும். குமாரவேல் பாண்டியன் பணிக்காலத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்குரிய பில்களுக்கு, ஒப்புதல் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள, 80 கோடி ரூபாயில், முதல்கட்டமாக, 20 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், திட்டப்பணிகளை தடையின்றி தொடர்ந்து செய்வதற்கான சூழலையும், ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X