தமிழக முதல்வரின் உத்தரவை மீறி பிளக்ஸ் பேனர் வைத்த கட்சியினர்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறி, பிளக்ஸ் பேனர் வைக்கும் கலாசாரத்தை கோவையில் தி.மு.க.,வினர் மீண்டும் துவக்கியுள்ளனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடத்தியபோது, ஹோப் காலேஜ் பகுதியில் வைத்த அலங்கார வளைவில் மோதி, இரு சக்கர வாகனத்தில் வந்த இன்ஜினியர் ரகு உயிரிழந்தார்.இதேபோல், அ.தி.மு.க., கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், இரு
 தமிழக முதல்வரின் உத்தரவை மீறி பிளக்ஸ் பேனர் வைத்த கட்சியினர்

கோவை:தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறி, பிளக்ஸ் பேனர் வைக்கும் கலாசாரத்தை கோவையில் தி.மு.க.,வினர் மீண்டும் துவக்கியுள்ளனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கோவையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடத்தியபோது, ஹோப் காலேஜ் பகுதியில் வைத்த அலங்கார வளைவில் மோதி, இரு சக்கர வாகனத்தில் வந்த இன்ஜினியர் ரகு உயிரிழந்தார்.இதேபோல், அ.தி.மு.க., கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ராஜேஸ்வரி விபத்துக்குள்ளாகி, வலது கால் இழந்தார்.இவ்விரு சம்பவங்களையும் கண்டித்த ஸ்டாலின், சென்னையில் இருந்து கோவை வந்து, இரு குடும்பத்தினரையும், சந்தித்து ஆறுதல் கூறினார்.தற்போது தமிழக முதல்வரானதும், கோவை வரும் போது, கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது; கட்சிக்கொடி கட்டக்கூடாது என, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.அவரது உத்தரவை மீறி, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில், புதிதாக அமைக்கப்பட்ட கிளாக் டவரில், மறைந்த முன்னாள முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, கட்சிக்கொடி பார்டருடன், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதை தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்களை பார்த்து, கோவை மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X