பொது செய்தி

இந்தியா

அன்னிய செலாவணி இருப்பு வரலாற்று சாதனை படைத்தது

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி, முதன் முறையாக 600 பில்லியன் டாலர் என்ற நிலையை தாண்டி உச்சம் தொட்டுள்ளது.இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 43.80 லட்சம் கோடி ரூபாய். ரிசர்வ் வங்கியின் கவர்னர், அண்மையில் நடைபெற்ற பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பின்போது, நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டும் என

மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி, முதன் முறையாக 600 பில்லியன் டாலர் என்ற நிலையை தாண்டி உச்சம் தொட்டுள்ளது.latest tamil newsஇது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 43.80 லட்சம் கோடி ரூபாய். ரிசர்வ் வங்கியின் கவர்னர், அண்மையில் நடைபெற்ற பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பின்போது, நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கூறியபடியே கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது மே 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 598 பில்லியன் டாலராக இருந்தது.


latest tamil newsதற்போதைய உயர்வுக்கு, வெளிநாட்டு பண இருப்பு மதிப்பு அதிகரித்தது ஒரு காரணமாக அமைந்துள்ளது. நாட்டின் தங்கத்தின் இருப்பு 3,665 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து, 2.74 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
12-ஜூன்-202111:59:33 IST Report Abuse
Aravon Soriyanin seedan அந்நிய செலவணி அதிகரிக்க பாடுபட்ட தலீவர் வாழ்க
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
12-ஜூன்-202110:51:55 IST Report Abuse
sahayadhas அப விலைவாசி வரி எல்லாம் குறைந்து விடும் . ஆக சந்தோசம்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
12-ஜூன்-202111:23:41 IST Report Abuse
கொக்கி குமாரு விலைவாசி, வரியெல்லாம் குறையாது. நம் மக்கள் தொகை 130 கோடிகள். அதில் இலவசமாக தின்று திளைப்பவர்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வாரி சுருட்டும் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக போன்ற கட்சிகள் இருக்கும் வரையில் வாய்ப்பே இல்லை, வாய்ப்பே இல்லை ராஜா....
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
12-ஜூன்-202110:28:01 IST Report Abuse
ponssasi தற்பெருமையே நம் சொத்து, ஆதார் என்னும் சொல்லை பலகோடி மக்கள் உச்சரித்தனர், நம் ஆரோக்கிய செயலிகளை பலகோடி பேர் பதிவிறக்கம் செய்தனர், உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி முகாம், நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் இதில் என்ன பெருமை, இலவச உணவுக்காக உலகிலே பெரிய வரிசை இந்தியாவிடம் தான் உள்ளது, காலை பத்துமணிக்கு கொடுக்கப்போகும் ரேஷன் அரிசிக்கு அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நீண்ட வரிசை, உயிர்காக்கும் தடுப்புஊசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசை, ஏன் கொரோனா தொற்றில் உலகில் முதல் மூன்று இடங்களுக்குள் நாம் தான். உலகில் பொருளாதாரம் குன்றிய நாடுகளில் கூட இல்லாத அளவாக பெட்ரோல், டீசல் விலையில் உச்சம் தொட்டதுவும் நாம் தான். பெருமைகளை விட அவமானகள் அதிகம், இன்றைய அதிகார வர்க்கம் அவமானங்களை கூட பெருமை படுத்தி பேசும் உலகம், ஏற்பது இகழ்ச்சி என்று போதித்த நாம் இன்று உலக நாடுகளிடம் அதிகமாக ஏந்துகிரோம் என்று பெருமைபேசும் அளவுக்கு வந்துவிட்டும்.இது களவாணிகளில் உலகம், சொல்வதுவும் வெல்வதுவும் அவர்களே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X