கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை ஏமாற்றிய வாலிபர்: கீழ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு, கீழ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.கோவை அருகேயுள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்,21. திருமணமான இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த, ஆறு வயது பெண் குழந்தை உள்ளபெண்ணுடன், பழக்கம் ஏற்பட்டது.அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொடர்பு வைத்தார்.

கோவை:கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு, கீழ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.கோவை அருகேயுள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்,21. திருமணமான இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த, ஆறு வயது பெண் குழந்தை உள்ளபெண்ணுடன், பழக்கம் ஏற்பட்டது.அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொடர்பு வைத்தார். அவரிடமிருந்து 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை வாங்கி கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார், ஏப்., 18ல்விக்னேசை கைது செய்து சிறையிலடைத்தனர். ஜாமினில் விடுவிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நிபந்தனை ஜாமினில் விடுவித்த மாவட்ட செஷன்ஸ் கோர்ட், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, ஜே.எம்:2, கோர்ட்டில், இரு ஜாமின்தாரருடன் ஆஜராக உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X