பா.ஜ.,எம்.எல்.ஏ., மீது அவதூறு: போலீசாரிடம் மகளிர் பிரிவு புகார்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:இணையம் வாயிலாக பா.ஜ., எம்.எல்.ஏ.,மீது, அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகிகளும், கட்சியினரும், மாநகர போலீசில் புகார் செய்தனர்.புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், கோவையை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் குறித்து ஆபாசமான
 பா.ஜ.,எம்.எல்.ஏ., மீது அவதூறு: போலீசாரிடம் மகளிர் பிரிவு புகார்

கோவை:இணையம் வாயிலாக பா.ஜ., எம்.எல்.ஏ.,மீது, அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகிகளும், கட்சியினரும், மாநகர போலீசில் புகார் செய்தனர்.புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், கோவையை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் குறித்து ஆபாசமான வார்த்தைகளை பதிவிட்டார். அதை ஜெகநாதன் என்பவர் பகிர்வதையும், நீக்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.இதேபோல் கோவையை சேர்ந்த, கீதா என்ற பெண்மணி தனது யு டியூப் சேனல் மூலம் பா.ஜ.,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதோடு, வானதிசீனிவாசன் மீது தனி மனித தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். அதனால் ரவிசங்கர் முகநூலில் பதிவிட்டதை, மாநகர போலீசார் ஆய்வு செய்து, அகற்றுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X