பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் குறையாத வைகை நீர் மட்டம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு எட்டு நாட்களாக நீர் வெளியேறியும் நீர் மட்டம் குறையாமல் 67.22 அடியாக பராமரிக்கப்படுகிறது.சில வாரத்திற்கு முன் பெய்த மழையால் போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு மற்றும் பெரியாறு மூலம் கிடைத்த நீரால் வைகை அணை நீர் மட்டம் ஜூன் 4ல் 67.54 அடியானது(மொத்த உயரம் 71 அடி). இதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு எட்டு நாட்களாக நீர் வெளியேறியும் நீர் மட்டம் குறையாமல் 67.22 அடியாக பராமரிக்கப்படுகிறது.

சில வாரத்திற்கு முன் பெய்த மழையால் போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு மற்றும் பெரியாறு மூலம் கிடைத்த நீரால் வைகை அணை நீர் மட்டம் ஜூன் 4ல் 67.54 அடியானது(மொத்த உயரம் 71 அடி). இதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக நெல் பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.

எட்டு நாட்களாக அணையில் நீர் வெளியேறியும் நீர் மட்டம் குறையாமல் 67.22 அடி அளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 575 கன அடி. பாசனத்திற்கு வழக்கம்போல் 69 கன அடி நீர் வெளியேறுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X