அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசு வரி குறைக்கலாம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
காரைக்குடி:''பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமெனில் மத்திய அரசு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும்'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு எந்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை தான். நான் நிதியமைச்சராக

காரைக்குடி:''பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமெனில் மத்திய அரசு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும்'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு எந்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை தான். நான் நிதியமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலர். அப்போது கூட இந்த விலை உயர்வு இல்லை.

தற்போது பீப்பாய் 70 டாலர் தான். மூன்றில் இரண்டு பங்கு தான். அன்று பெட்ரோல் ரூ.55க்கு விற்க முடிந்தது. இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒரே வழி மத்திய அரசு போடக்கூடிய வரிகளை குறைக்க வேண்டும்.தடுப்பூசி தட்டுப்பாடு தீராது. 180 கோடி தடுப்பூசி வேண்டும். இவ்வளவு தடுப்பூசியை இந்தியாவில் உள்ள 2 நிறுவனங்களால் தயாரிக்க முடியாது.
மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது. நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. மத்திய அரசு நடத்தும் கல்லுாரிகளுக்கு நீட் தேர்வு வைத்துக் கொள்ளட்டும். கொரோனாவை ஒழிக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை. மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் ஊரடங்கு தேவையில்லை. தமிழக அரசின் ஒருமாத செயல்பாடு குறித்து தற்போது கணிக்க முடியாது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X