சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி தாயுடன் அரசு பள்ளி மாணவி நிதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்:அரசு துவக்கப் பள்ளி மாணவி, தன் உண்டியல் சேமிப்பு மற்றும் மாற்றுத் திறனாளி தாயின் இரண்டு மாத உதவித்தொகையை, கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.நாகப்பட்டினம் அடுத்த முட்டத்தைச் சேர்ந்தவர் அருள், 43; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா, 35. வலது கை செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவர்களது மகள் பிருந்தா, அப்பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில்,
 மாற்றுத்திறனாளி தாயுடன் அரசு பள்ளி மாணவி நிதி

நாகப்பட்டினம்:அரசு துவக்கப் பள்ளி மாணவி, தன் உண்டியல் சேமிப்பு மற்றும் மாற்றுத் திறனாளி தாயின் இரண்டு மாத உதவித்தொகையை, கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

நாகப்பட்டினம் அடுத்த முட்டத்தைச் சேர்ந்தவர் அருள், 43; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா, 35. வலது கை செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவர்களது மகள் பிருந்தா, அப்பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா நிதிக்காக பள்ளி மாணவ, - மாணவியர் உதவி வருவதை கேள்விப்பட்ட பிருந்தா, தன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்க முடிவு செய்து, தந்தையிடம் கூறியுள்ளார்.

இதன்படி, பிருந்தா மற்றும் அவரது பெற்றோர், கலெக்டர் பிரவின் நாயரிடம், சிறுமியின் உண்டியல் சேமிப்பு பணம் 2,195 ரூபாய் மற்றும் சித்ரா, தனக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் இரண்டு மாத உதவித்தொகை, 2,000 ரூபாயை வழங்கினர். மாணவி பிருந்தாவை, கலெக்டர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X