பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை இன்று திறப்பு கல்லணையில் முதல்வர் ஆய்வு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் நிலையில், கல்லணையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாசன வாய்க்கால்கள் துார் வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. இதற்காக டெல்டா மாவட்டங்களில், பாசன கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடந்தன.தஞ்சாவூர்
 மேட்டூர் அணை இன்று திறப்பு கல்லணையில் முதல்வர் ஆய்வு

தஞ்சாவூர்:மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் நிலையில், கல்லணையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாசன வாய்க்கால்கள் துார் வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. இதற்காக டெல்டா மாவட்டங்களில், பாசன கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடந்தன.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையும் புனரமைக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு நீர்பாசனத்துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கல்லணை மற்றும் ஆறுகள், கால்வாய்களில் நடக்கும் துார் வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உடன் இருந்தனர்.தொடர்ந்து, வல்லம் அருகே உள்ள முதலைமுத்து வடிகால், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடந்து வரும் துார்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.திருச்சியிலும் ஆய்வுதஞ்சையில் ஆய்வை முடித்த முதல்வர் , திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குழுமணி கொடியாலம், கொடிக்கால் வாய்க்காலில் நடந்து வரும் துார் வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

அரசு விருந்தினர் மாளிகையில், மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தவர், தனி விமானத்தில் சேலம் புறப்பட்டுச் சென்றார். நலத்திட்ட உதவிசேலம் மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், 23 ஆயிரத்து, 977 மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டன. அவற்றில் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அவற்றில் 10 பேருக்கு ஆணைகள், நலத்திட்ட உதவிகளை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

காலை 10:00 மணிமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப் படும்.அதற்கு, அணையில் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும்.நேற்று, அணை நீர்மட்டம், 96.80 அடியாக இருந்தது. டெல்டா குறுவை சாகுபடிக்கு, இன்று காலை 10:00 மணிக்கு மேட்டூர் அணையில், முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X