பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூலுக்கு உதவும் திரவ உயிர் உரங்கள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் தயாரிக்கப்படும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி வேளாண்மையில் அதிக மகசூல் பெறலாம். பழநியில் 2017 முதல் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப் படுகிறது. திண்டுக்கல், கோவை, கரூர், சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் பத்மபிரியா கூறியதாவது:

பழநி : பழநியில் தயாரிக்கப்படும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி வேளாண்மையில் அதிக மகசூல் பெறலாம்.

பழநியில் 2017 முதல் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப் படுகிறது. திண்டுக்கல், கோவை, கரூர், சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் பத்மபிரியா கூறியதாவது: தொடர்நிலை ஓட்டம், வடிகட்டி கருவி எனும் உயர்ந்த தொழில் நுட்பத்தில் திரவ உயிர்உரம் உற்பத்தியாகிறது. இந்த உரம் வளிமண்டலத்தில் தழைச்சத்தை பெற உதவும் அசோஸ்பைரில்லத்தை நெல், இதர பயிர்களுக்கு தனித்தனியாகவும், ரைசோபியம் உரத்தை நிலக்கடலை, பயறு வகைகளுக்கு தனித்தனியாகவும் கொடுக்கிறது.

மேலும் மண்ணில் இருந்து மணிச்சத்தை கொடுக்க பாக்டீரியா உயிர் உரம், சாம்பல் சத்தை கொடுக்க பொட்டாஷ், பாக்டீரியா உயிர் உரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை பயன்படுத்துவதால் மகசூல் அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X