கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை 'எய்ம்ஸ்' தற்காலிக வளாகம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை தற்காலிகவளாகத்தை துவக்கி, சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில் ஜூன் 30ல் மத்திய அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை கெடு விதித்தது.மதுரை அதலையைச் சேர்ந்த, புஷ்பவனம் தாக்கல்செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2018 டிச., 17ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2019 ஜன., 27ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்

மதுரை:மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை தற்காலிகவளாகத்தை துவக்கி, சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில் ஜூன் 30ல் மத்திய அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை கெடு விதித்தது.

மதுரை அதலையைச் சேர்ந்த, புஷ்பவனம் தாக்கல்செய்த பொதுநல மனு:மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2018 டிச., 17ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2019 ஜன., 27ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.மதுரை மற்றும் தெலுங்கானா பி.பி., நகரில் எய்ம்ஸ் அமைக்க ஒரே நாளில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பி.பி., நகரில் தற்போது வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நடக்கின்றன; கட்டுமானம் முடிந்து விட்டது.மதுரையில் கட்டுமானம் முடியும் வரை, தற்காலிக வளாகத்தில் எய்ம்சை துவக்க வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை துவக்கி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர்: காலி இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. மேலும் உதவிகள் கோரும்பட்சத்தில் ஒத்துழைக்க தயார்.மனுதாரர் வழக்கறிஞர்: மதுரை எய்ம்சில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடக்கும்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி அல்லது மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி அல்லது தனியார் மருத்துவமனையில் வகுப்புகள் துவங்கும் என, மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.மத்திய அரசு வழக்கறிஞர்: மத்திய அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க மூன்று வாரம் அவகாசம் தேவை.நீதிபதிகள்: மூன்று வாரம் அதிகம். ஜூன் 30ல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X