இந்தியா

'ஸ்பிக்' உரம் விலை குறைப்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி:ஸ்பிக் உரங்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்றின் விளைவாக, சர்வதேச சந்தையில் உரம் தயாரிப்பின் மூலப்பொருட்களுக்கான விலை உயர்ந்ததால், டி.ஏ.பி., - என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை அதிகரித்து கொண்டே சென்றது.இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அதை உணர்ந்து, மத்திய அரசு

புதுச்சேரி:ஸ்பிக் உரங்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா தொற்றின் விளைவாக, சர்வதேச சந்தையில் உரம் தயாரிப்பின் மூலப்பொருட்களுக்கான விலை உயர்ந்ததால், டி.ஏ.பி., - என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை அதிகரித்து கொண்டே சென்றது.இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அதை உணர்ந்து, மத்திய அரசு ஆண்டுதோறும் உர மானியத்திற்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி வந்த நிலையில், இந்தாண்டு கரீப் பருவத்திற்கு, 14 ஆயிரத்து, 775 கோடி ரூபாய் கூடுதல்மானியமாக ஒதுக்கி உள்ளது.

இதையடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஸ்பிக் டி.ஏ.பி., ஸ்பிக் 20:20:0:13 காம்ப்ளக்ஸ், ஸ்பிக் சூப்பர் போன்ற உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஸ்பிக் டி.ஏ.பி., 50 கிலோ மூட்டை, வரிகள் உட்பட புதிய அதிகபட்ச சில்லரை விலையாக 1,200 ரூபாய், ஸ்பிக் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் 50 கிலோ மூட்டை, 1,075 ரூபாய், ஸ்பிக் சூப்பர் 50 கிலோ மூட்டை, 425 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள், புதிய விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு விற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். குறைக்கப்பட்ட விலையில், உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி, உணவு தானிய உற்பத்தியை பெருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X