ரூ.2,790 கோடி முறைகேடு பிரபல நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:மெய்நிகர் நாணய சந்தையில், முறைகேடாக 2,790 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்த குற்றச்சாட்டில், 'வசிர்எக்ஸ்' நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, வசிர்எக்ஸ் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும், 'கிறிப்டோ கரன்சி' என்ற, மெய்நிகர் நாணயங்கள் சந்தையை நடத்தி வருகிறது. சூதாட்டம் இந்நிறுவனம்,

புதுடில்லி:மெய்நிகர் நாணய சந்தையில், முறைகேடாக 2,790 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்த குற்றச்சாட்டில், 'வசிர்எக்ஸ்' நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, வசிர்எக்ஸ் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும், 'கிறிப்டோ கரன்சி' என்ற, மெய்நிகர் நாணயங்கள் சந்தையை நடத்தி வருகிறது.


சூதாட்டம்



இந்நிறுவனம், அன்னியச் செலாவணி சட்டம், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டம் ஆகியவற்றை மீறி, 2,790 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்துள்ளதாக, அமலாக்கத் துறை அந்நிறுவனத்திற்கும், இயக்குனர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:வலைதளத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடத்தி, முறைகேடாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஒரு சீன நிறுவனம் குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதில், வசிர்எக்ஸ் நிறுவனம், மெய்நிகர் நாணயங்கள் வழியே, முறைகேடாக, 2, 790 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.

இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கேமன் தீவைச் சேர்ந்த, பினான்ஸ் மெய்நிகர் சந்தையில் இருந்து, 880 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கிறிப்டோ கரன்சி பெற்றுள்ளனர். அதுபோல, இந்தியாவில் இருந்து, 1,400 கோடி ரூபாய் மதிப்பிற்கான கிறிப்டோ கரன்சி, பினான்ஸ் மெய்நிகர் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுடன், 510 கோடி ரூபாய் மதிப்பிற்கு நடந்த பரிவர்த்தனைகள் குறித்து, வசிர்எக்ஸ் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடவில்லை.

எனவே இந்த பணம், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கவும் வழங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மறுப்புஇது தொடர்பாக, வசிர்எக்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர்கள் நிஷால் செட்டி, சமீர் ஹனுமன் மாத்ரே ஆகியோருக்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, அன்னியச் செலாவணி சட்டம் ஆகியவற்றின் கீழ், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வசிர்எக்ஸ் நிறுவன இயக்குனர்கள் மறுத்துள்ளனர். சட்டப்படியே வர்த்தகம் செய்து வருவ தாக அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X