பொது செய்தி

தமிழ்நாடு

தடுக்கலாமே! நீர் நிலைகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்.... தடையை கண்டுக்காததால் நிலத்தடி நீர் பாழ்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. அரசின் தடை உத்தரவை முறையாக கண்காணித்தாலே இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.முந்தைய காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை தேக்கி வைக்க ஆங்காங்கே கண்மாய்கள், ஊரணிகளை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது நீர் நிலைகள் அனைத்திலும்

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது.

அரசின் தடை உத்தரவை முறையாக கண்காணித்தாலே இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.முந்தைய காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை தேக்கி வைக்க ஆங்காங்கே கண்மாய்கள், ஊரணிகளை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது நீர் நிலைகள் அனைத்திலும் கழிவு நீர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி வழிகிறது. பொது மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கும், சிறுவர்கள் நீந்தி விளையாடுவது என ஆண்டாண்டு காலமாக இருந்த வந்த நிலை கழிவுநீர் ,குப்பை நிரம்பலால் தற்போது இல்லை. இது தவிர குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களும் குப்பையை நீர் நிலைகளில் கொட்டி தீ வைக்கின்றனர்.

இதையும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பறவைகள் , கால்நடைகள் கூட நீர்நிலை களை நாடி வருவதில்லை. மக்காத தடை பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பால் நீர்நிலைகள் சுகாதாரக்கேடுடன் நோய் தொற்று கேந்திரமாகவும் மாறி வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகமதான் வழி காண வேண்டும்................விழிப்புணர்வு ஏற்படுத்துங்க மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் கழிவுகள் சேர்ந்த ஆவரம்பட்டி ஊரணி ,வடுக ஊரணி இரண்டையும் துார் வாரி சுத்தப்படுத்தினோம். ஆனால் அதை முறைப்படி மழை நீர் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மீண்டும் கழிவு நீர், குடியிருப்பு பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் பகுதியாக மாற்றி விட்டுள்ளனர்.

குடியிருப்புகள் அருகில் உள்ள ஊரணிகளின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.ராமராஜ், சமூக ஆர்வலர், ராஜபாளையம்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X