பொது செய்தி

தமிழ்நாடு

கலை வண்ணத்தில் மிளிரும் மண்பானைகள் 'கலர்புல்' ஆக காட்சி தரும் வீட்டின் சுவர்கள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : காண்பவரை கவர்ந்து உள்ளங்களை கொள்ளை கொள்ளும் உயர்ந்த கலை ஓவியக் கலை. ஒவியம் பேசும் செய்திகள் பல. அவை உணர்த்தும் கருத்துக்களும் பல. ஓவியக் கலை சித்திரம், படம் என பல பெயர்களில் குறிப்பிடபடுகிறது. மேலை நாடுகளில் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்து கின்றனர். ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் தருவர். பொழுது போக்குகளில் ஓவியம்

அருப்புக்கோட்டை : காண்பவரை கவர்ந்து உள்ளங்களை கொள்ளை கொள்ளும் உயர்ந்த கலை ஓவியக் கலை. ஒவியம் பேசும் செய்திகள் பல. அவை உணர்த்தும் கருத்துக்களும் பல. ஓவியக் கலை சித்திரம், படம் என பல பெயர்களில் குறிப்பிடபடுகிறது.

மேலை நாடுகளில் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்து கின்றனர். ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் தருவர். பொழுது போக்குகளில் ஓவியம் வரைவது முக்கியமானதாக கருத்தப்படுகிறது. நன்கு கற்பனை வளம், நினைத்ததை ஓவியமாக வரைய தெரியும் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே ஓவியம் சாத்தியப்படும். காண்பதை தத்ரூபமாக வரைய தனி திறமை வேண்டும். நவீன உலகில் ஓவியம் வரைவது, கற்றுக் கொள்வது அரிதாக உள்ளது. இத்தகைய ஓவியக் கலையை பயிற்சி எதுவும் எடுக்காமல் தானாக வரைந்து அதில் தேர்ச்சி பெற்று மண்பானைகள், சுவர்கள், கண்ணாடிகளில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.
அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டியை சேர்ந்த கிராம பட்டதாரி பெண் நந்தினி.5 வது படிக்கும் போதே ஓவியம் வரைவதில் விருப்பம் அதிகம். அன்றிலிருந்து ஓவியத்தை தானாக வரைந்து பயிற்சி எடுத்து இன்றைக்கு தேர்ந்த ஓவியராகி விட்டார். மண்பானைகள் இவரது கலை வண்ணத்தில் மிளிருகிறது. வீட்டின் சுவர்கள் 'கலர்புல்' ஆகி காட்சி அளிக்கிறது. ஓவியத்தில் சாதிக்க ஆவல்நந்தினி கூறியதாவது: ஓவியம் வரைவதில் எனக்கு அதிக விருப்பம். எந்தவித பயிற்சி எடுக்காமல், நானே கற்றுக் கொண்டேன். யூ டியூப் மூலமும் பயிற்சி எடுத்தேன்.

சுவர்களில் ஓவியம் வரைவது பிடிக்கும். மண் சட்டிகள், கண்ணாடி பாத்திரங்களில் வண்ணம் தீட்டுவேன். என் நண்பர்கள் விசேஷ நிகழ்ச்சிக்கு கிப்ட் கொடுக்க ஓவியம் வரைந்து தருவேன். ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே நீண்ட கால ஆசை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X