உத்தரகண்ட் பனிச்சரிவு: விஞ்ஞானிகள் ஆய்வு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்கு, பிரமாண்ட கற்பாறைகளும், பனிப்பாறைகளும் வீழ்ந்ததே காரணம் என, நிபுணர்கள் தெரிவித்தனர்.உத்தரகண்ட் மாநிலம் சமோலியில், கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நந்தாதேவி மலை சிகரத்தில் இருந்த பனிப்பாறை உடைந்ததால், ரிஷிகங்கா மற்றும் தவுலிகங்கா

புதுடில்லி:உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்கு, பிரமாண்ட கற்பாறைகளும், பனிப்பாறைகளும் வீழ்ந்ததே காரணம் என, நிபுணர்கள் தெரிவித்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில், கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நந்தாதேவி மலை சிகரத்தில் இருந்த பனிப்பாறை உடைந்ததால், ரிஷிகங்கா மற்றும் தவுலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உட்பட, பல சர்வதேச ஆய்வு அமைப்புகளை சேர்ந்த, 53 விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். பனிச்சரிவுக்கு முன்னும், பின்னுமான செயற்கைகோள் புகைப்படங்களை ஆய்வு செய்தனர்.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், 2.7 கோடி கியூபிக் மீட்டர் அளவிலான பிரமாண்ட கற்பாறைகள் மற்றும் பனிப்பாறைகள் உருண்டதில், இந்த விபத்துஏற்பட்டதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள், 'சயின்ஸ்' எனும் சுற்றுச்சூழலியல் இதழில் வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X