பொது செய்தி

இந்தியா

'டிரைவிங் லைசென்ஸ்' விதி: மத்திய அரசு அதிரடி மாற்றம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுவோர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களை இயக்காமல், 'லைசென்ஸ்' பெறுவதற்கான புதிய விதிகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே
டிரைவிங்லைசென்ஸ், விதி, மத்திய அரசு,மாற்றம்

புதுடில்லி: அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுவோர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களை இயக்காமல், 'லைசென்ஸ்' பெறுவதற்கான புதிய விதிகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.


டிரைவிங் ஸ்கூலில் இனி லைசன்ஸ் எடுக்கலாம்

நடைமுறை

இந்த நடைமுறைகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.



புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது: இதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதி இருக்க வேண்டும். பயிற்சியளிப்பவர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.


latest tamil news



போக்குவரத்து சின்னங்கள், போக்குவரத்து விதிகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கு மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.


'வீடியோ' பதிவு



இதுபோன்ற பயிற்சிக்கு பின், 'சென்சார்' ஓடுபாதையில் வாகனம் ஓட்டும் சோதனையில் வெற்றி பெறுவதுடன், அதனை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்.இந்த சான்றுகளுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே அவர்கள் லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, அடுத்த மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
12-ஜூன்-202117:58:25 IST Report Abuse
karutthu மறுபடியும் நேம் போர்டு கலர் (கருப்பு ,வெள்ளை , மஞ்சள் ) எல்லாம் மாற்ற சொல்லுவார்களோ ?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
12-ஜூன்-202117:50:34 IST Report Abuse
karutthu எதற்கும் கமலஹாசன் நடித்த இந்தியன் (ஆர் டி ஓ ஆஃபீசர் அக நடித்திருப்பார் ) படத்தை பார்க்கவும் இப்போ இருக்கிற சிஸ்டம் பரவாயில்லை
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
12-ஜூன்-202113:51:32 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்சம் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற முடியாததால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே ஓட்டிக் கொண்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X