பொது செய்தி

தமிழ்நாடு

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சேதமடைந்த ரோடுதிருத்தங்கல் பாண்டியன் நகரில் சேதமடைந்த ரோட்டால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குரு, பாண்டியன் நகர்.விரைவில் நடவடிக்கைரோட்டை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்பாண்டித்தாய், நகராட்சி கமிஷனர், திருத்தங்கல்வீணாகும் குடிநீர் ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோடு

சேதமடைந்த ரோடுதிருத்தங்கல் பாண்டியன் நகரில் சேதமடைந்த ரோட்டால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குரு, பாண்டியன் நகர்.விரைவில் நடவடிக்கைரோட்டை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்பாண்டித்தாய், நகராட்சி கமிஷனர், திருத்தங்கல்வீணாகும் குடிநீர் ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோடு கிருஷ்ணாபுரம் ஊராட்சி செல்லும் குடிநீர் குழாயில் பல மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருகிறது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலா, திருவள்ளுவர் நகர்.விரைவில் சீரமைக்கப்படும்மெயின் ரோட்டில் கசிவு ஏற்பட்டு உள்ளதால் தோண்டுவதற்கான அனுமதிக்கு காத்திருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும். நித்யா, ஊராட்சி தலைவர், கிருஷ்ணாபுரம்.வாய்க்காலில் மணல் ஸ்ரீவில்லிபுத்துார் உழவர் சந்தை எதிர்ப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மணல் குவியல் காணப்படுவதால் மழை நேரத்தில் ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.கணேசன், ஸ்ரீவில்லிபுத்துார்.சரி செய்யப்படும்உடனடி நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்.பழனிக்குரு, சுகாதார ஆய்வாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.

குப்பை தீயால் சுகாதாரக் கேடுவிருதுநகர் நகராட்சி நிர்வாகம் சரிவர குப்பை வாங்காததால் எச்.1.எச்.1., ரோடு , படேல் ரோடும் சந்திக்குமிடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. தொற்று அபாயம் நிலவும் இந்நேரத்தில் சிலர் தீ வைக்கின்றனர். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.லெனின், விருதுநகர்.அகற்ற நடவடிக்கைகுப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.குருசாமி, சுகாதார ஆய்வாளர், விருதுநகர் நகராட்சி.நிழற்குடை தேவைசாத்துார் டூ கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டியபட்டி கிராமம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பலர் விபத்திற்குள்ளாகின்றனர்.

நிழற்குடை கட்டித்தர வேண்டும்.பத்மனாபன், பெத்துரெட்டியபட்டி.அனுமதி இல்லைதேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ., நிதியில் பணி துவங்கிய போதும் அனுமதி இல்லாமல் பணி நிறுத்தப்பட்டது.நாகரத்தினம், ஊராட்சி தலைவர், பெத்துரெட்டியபட்டி.பழுதான மின்மோட்டார்ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதி சந்தில் உள்ள குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் விநியோகிப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.செல்வராஜ், ஸ்ரீவில்லிபுத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்மின்மோட்டார் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்ரமேஷ், நகராட்சி பொறியாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.

சாக்கடை அடைப்பால் சுகாதாரக் கேடுகாரியாபட்டி பாண்டியன் நகர் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்போர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாஞ்சிநாதன், காரியாபட்டிசுத்தம் செய்யப்படும். விரைவில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.முருகன், செயல் அலுவலர், காரியாபட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X