பொது செய்தி

தமிழ்நாடு

கூமாபட்டியில் ஒற்றை யானை

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி தோப்புகளில் ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இங்குள்ள மலையடிவார கிராமங்களில் உள்ள தோப்புகள் , வயல்பகுதிகளில் அவ்வப்போது யானை வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.நேற்று முன்தினம் இரவு கூமாபட்டி நெடுங்குளம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி தோப்புகளில் ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இங்குள்ள மலையடிவார கிராமங்களில் உள்ள தோப்புகள் , வயல்பகுதிகளில் அவ்வப்போது யானை வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.நேற்று முன்தினம் இரவு கூமாபட்டி நெடுங்குளம் மலையடிவார தோப்பில் ஒற்றை யானை புகுந்து தென்னை , மா மரங்களை சேதப்படுத்தின. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் கடந்த இரு நாட்களாக இரவு ரோந்தை தீவிரப்படுத்தி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர்.வேரோடு மரங்கள் சாய்ப்புராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீராம் விஜய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் 14 ஏக்கரில் தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவரது தோப்பில் புகுந்த ஒற்றை யானை 7 தென்னை மரங்களை சேதமாக்கின. இரு மரங்கள் தவிர மற்ற மரங்களை வேரோடு சாய்த்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X