சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் வக்கீல் அடாவடி: பார் கவுன்சிலுக்கு கடிதம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை,: 'வாகன சோதனையின்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.சென்னை, சேத்துப்பட்டில் சில நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணும், அவரது வக்கீல் பயிற்சியாளர் பெண்ணும் போலீசாரிடம்

சென்னை,: 'வாகன சோதனையின்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.சென்னை, சேத்துப்பட்டில் சில நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணும், அவரது வக்கீல் பயிற்சியாளர் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.விசாரணையில் பயிற்சியாளர், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஜா கத்துலா என்பதும், அந்த இளம்பெண், அவரது மகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், தனுஜா கத்துலா மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பினர்.போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடிதத்தில் போலீஸ் கமிஷனர் கூறியிருப்பதாவது:வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், தங்கள் கடமையை செய்ய, வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டும்; இடையூறாக இருக்கக் கூடாது என்பதை வழக்கறிஞர்களுக்கு வலியுறுத்த வேண்டுகிறோம்.போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனுஜா கத்துலா மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X