கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேவையற்ற வாகனங்களை அகற்ற தலைமைச் செயலர் உத்தரவு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை : அரசு கட்டட வளாகங்களில், தேவையின்றி குவிந்து கிடக்கும் வாகனங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு, கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:அரசு வளாகங்களில், மிகவும் பழமையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை வளாகத்திற்கு மோசமான தோற்றத்தை அளிக்கின்றன. அந்த

சென்னை : அரசு கட்டட வளாகங்களில், தேவையின்றி குவிந்து கிடக்கும் வாகனங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு, கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:அரசு வளாகங்களில், மிகவும் பழமையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை வளாகத்திற்கு மோசமான தோற்றத்தை அளிக்கின்றன. அந்த வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. அந்த வாகனங்கள், எதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என, யாரை கேட்டாலும் தெரியவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், அந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான வழிகளை கண்டறிந்து, விரைவாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவற்றை அங்கிருந்து எடுத்தால், வாகனங்களை நிறுத்த கூடுதல் இடம் கிடைக்கும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும். செயலாக்க துறைகள் பறிமுதல் செய்த வாகனங்கள், வழக்கு முடிவடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, அந்த வாகனங்களையும் அகற்ற வேண்டும்.சில நேரங்களில், அந்த வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யும்போது, யாரும் ஏலம் எடுக்க முன்வருவதில்லை. அந்த வாகனங்கள் மழை மற்றும் வெயிலில், மேலும் சேதமடைகின்றன. இதனால், அரசுக்கு வருவாய் குறையும்.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், சரியான விலையை நிர்ணயம் செய்து, அந்த வாகனங்களை விரைவாக ஏலம் விட வேண்டும். இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து, பொதுத் துறை செயலருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X