பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வாசலில் மின் கட்டணம் அமலுக்கு வருமா புதிய வசதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:வீட்டு வாசலிலேயே 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மின் வாரியம் விரைவாக செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மின் நுகர்வோர்களிடம் எழுந்துள்ளது.தமிழக மின் வாரிய ஊழியர்கள் வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.அந்த கட்டணத்தை மின் வாரிய

சென்னை:வீட்டு வாசலிலேயே 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மின் வாரியம் விரைவாக செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மின் நுகர்வோர்களிடம் எழுந்துள்ளது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள் வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.அந்த கட்டணத்தை மின் வாரிய கட்டண வசூல் மையங்கள் அரசு 'இ -- சேவை' மையங்கள் தபால் நிலையங்கள் சில வங்கிகளில் செலுத்தலாம். இதுதவிர மின் வாரிய இணையதளம் மொபைல் செயலி 'பாரத் பில்' உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம்.

முதியவர்கள் மின் கட்டண மையங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர்கள் மாற்று திறனாளிகள் பயன் பெறும் வகையில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வாயிலாக 'டெபிட் கிரெடிட்' கார்டு பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்தது.

இதனால் மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்லும் ஊழியர்கள் மின் கட்டணத்தை தெரிவித்த உடனே அவர்களிடம் செலுத்தலாம். இதுவரை அத்திட்டம் செயல்படுத்தவில்லை.கொரோனா தொற்றால் முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர சிரமப்படுகின்றனர். எனவே வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மின் வாரியம் விரைவாக செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X