சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் தேசிய வாத காங். தலைவர் சரத்பவாரை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு பேட்டி அளித்துஇருந்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியிலிருந்து விலகப் போவதாக
  சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் தேசிய வாத காங். தலைவர் சரத்பவாரை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு பேட்டி அளித்துஇருந்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியிலிருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசினார். வரும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த எம்.பி., நவாப் மாலிக் கூறுகையில், சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் இடையிலான சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. அப்போது, பிரசாந்த்தை தேசியவாத காங்கிரசின் ஆலோசகராக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
12-ஜூன்-202111:04:20 IST Report Abuse
sahayadhas நீங்க மட்டும் வந்தா gas விலை 7 ஆண்டுக்கு முன் ரூ 320 இருந்தது Petrol 67 ரூ இருந்தது வருமா? வருமா? ஹிந்துகளை விலைவாசி லிருந்து காப்பாற்றுவீங்களா?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
12-ஜூன்-202110:49:18 IST Report Abuse
s t rajan பதவி வெறிப் பவாருக்கு, "சீர்குலைப்பு ரத்னா " பட்டம் கொடுத்து விழா எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
C G Chinnaswamy - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202110:40:56 IST Report Abuse
C G Chinnaswamy இந்த பிரசாந்த் கிஷோர் போன டில்லி தேர்தலில் மகளிருக்கு மெட்ரோ பிரீ என்று ஆம் ஆத்மி பார்ட்டிக்கு சொல்லிக்கொடுத்தது ஒரு மெயின் காரணம். பின்பு டில்லி உயர் நீதி மன்றத்தால் கெஜ்ரி வால் கண்டிக்கப்ப ட்டார். இது போல்தான் தேச நலனுக்கு விரோதமான, சீப் ஆன அறிவுரைகளை சொல்லி ஜெயிக்க உதவுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X