மருந்தாளுனர்கள் பணி நிரந்தரம் முதல்வரிடம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருந்தாளுனர்கள் பணி நிரந்தரம் முதல்வரிடம் வலியுறுத்தல்

Added : ஜூன் 12, 2021
Share
தஞ்சாவூர்:தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனமுதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.தஞ்சாவூர் வெண்ணாறில் துார்வாரும் பணியினை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும்

தஞ்சாவூர்:தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனமுதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் வெண்ணாறில் துார்வாரும் பணியினை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தேசிய குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளாக 805 பேர் மருந்தாளுநர்களாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. நாங்கள் கொரோனா தொற்று காலத்திலும் பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அனைவரையும் பணி நிரந்தர செய்து அரசு மருந்தாளுநர்களாக நியமித்து காலமுறையில் சம்பளம் வழங்க வேண்டும். குறிப்பிட்டிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X