சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண மையங்களில் அலைமோதிய நுகர்வோர்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:மின் கட்டண மையங்களில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய இரு தினங்களே இருப்பதால் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் அன்று முதல் மின் கட்டணம் செலுத்த கடைசி தேதியாக உள்ள நுகர்வோர்கள் அபராதமின்றி செலுத்த இம்மாதம் 15ம் தேதி வரை மின்

சென்னை:மின் கட்டண மையங்களில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய இரு தினங்களே இருப்பதால் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் அன்று முதல் மின் கட்டணம் செலுத்த கடைசி தேதியாக உள்ள நுகர்வோர்கள் அபராதமின்றி செலுத்த இம்மாதம் 15ம் தேதி வரை மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

மின் கட்டணத்தை இணையதளம் மொபைல் செயலி போன்ற 'டிஜிட்டல்' முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இருந்தாலும் பலரும் மின் கட்டண மையங்களில் செலுத்தி வருகின்றனர்.மின் வாரியத்திற்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளும்; வாரத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளும் விடுமுறை. இதனால் இன்று மின் கட்டண மையங்கள் செயல்படாது.

மின் கட்டண மையங்களில் அபராதமின்றி கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவடைகிறது.இதனால் நேற்று மின் கட்டணம் செலுத்த நுகர்வோர் திரண்டதால் மின் கட்டண மையங்களில் கூட்டம் அலைமோதியது.வட சென்னையில் சில இடங்களில் இருந்த மின் கட்டண மையங்களில் 'சர்வர்' பழுது ஏற்பட்டது. இதனால் கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஆனதால் கூட்டம் அதிகரித்தது.மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கவில்லை. மேலும் முக கவசங்களையும் சரியான முறையில் அணியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X