சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவக்கழிவு பராமரிப்பில் சிக்கல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கம்பம் : தேனிமாவட்டத்தில் இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில்அரசு மருத்துவமனைகளில்உள்ளகொரோனா சிகிச்சை மையங்களில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகள் வாகனங்களில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளான்டிற்கு கொண்டு சென்று அழிக்கப்படுகிறது.

கம்பம் : தேனிமாவட்டத்தில் இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில்அரசு மருத்துவமனைகளில்உள்ளகொரோனா சிகிச்சை மையங்களில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகள் வாகனங்களில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளான்டிற்கு கொண்டு சென்று அழிக்கப்படுகிறது. இந்நிலையில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படிகூடலுார், கோம்பை, ஓடைப்பட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் எட்டு மையங்களிலும் சேகரமாகும் பயன்படுத்தப் பட்டமுகக்கவசங்கள், கவச உடைகள், கையுறைகள், தலையுறைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளைஅங்கு பராமரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.சில இடங்களில் இருந்து எடுத்துச்சென்று குப்பையில் வீசப்படுகிறது.இதனால் சுகாதாரம் பாதிக்கப்படும்சூழல் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X