பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்குப்பின் உடல்நல பிரச்னை தீர்வுக்கு 'டெலி கன்சல்டிங்' வசதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேனி : கொரோனா சிகிச்சைக்கு பின் ஏற்படும் உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வுக்காக வெளி நோயாளிகளுக்கு தினசரி 8 மணி நேரம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்களின் டெலி கன்சல்டிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்கு

தேனி : கொரோனா சிகிச்சைக்கு பின் ஏற்படும் உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வுக்காக வெளி நோயாளிகளுக்கு தினசரி 8 மணி நேரம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்களின் டெலி கன்சல்டிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் வார்டு, கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட வார்டு துவக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா சிகிச்கைக்கு பின் ஏற்படும் பிரச்னை களுக்கு தீர்வு காணும் வகையில் டெலி கன்சல்டிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் கூறுகையில், கொரோனாவிற்கு பிந்தைய கவனிப்பு மையம்” மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் நலனுக்காக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும்.

இதில் தினசரி காலை 9:00 - காலை 11:00 மணி வரை மூச்சுப்பயிற்சி, உடல்நல பயிற்சிகள் மூலம் குணமடைய பிஸியோ தெரபிஸ்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொது மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு டாக்டர் சரவணன் 93423 03859 , இருதய மருத்துவ நிபுணர் டாக்டர் இலக்கியசெல்வன் 93423 - 88704 , மனநல டாக்டர் ஆனந்தகிருஷ்ணக்குமார் 93423 - 77186 ஆகியோரை அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் அவர்கள் 'டெலி கன்சல்டிங்' முறையில் வீடியோ மூலம் ஆலோசனை வழங்குவர்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X