பொது செய்தி

இந்தியா

கொரோனாவில் மீண்ட 104 வயது மூதாட்டி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில், கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட, 104 வயது மூதாட்டி, 11 நாட்களில் குணமடைந்தார்.கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி அம்மா, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானதால், தலிபரம்பாவில் உள்ள பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப் பட்டார்.சமீபத்தில் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், பரியாரம் மருத்துவக்

திருவனந்தபுரம்:கேரளாவில், கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட, 104 வயது மூதாட்டி, 11 நாட்களில் குணமடைந்தார்.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி அம்மா, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானதால், தலிபரம்பாவில் உள்ள பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப் பட்டார்.சமீபத்தில் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், பரியாரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், மிக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, 11 நாள் சிகிச்சையில் பூரண குணமடைந்த அவர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, ''இந்த வயதிலும் நோயை எதிர்த்து போராடிய ஜானகி அம்மாவின் நம்பிக்கை, அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X