ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பாதிப்புகளால் அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உதவித்தொகை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிய மனு உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வில் நேற்று

புதுடில்லி:'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உதவித்தொகை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிய மனு உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தேசிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கான மென் பொருளை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு ஏன் தாமதம் ஏற்படுகிறது என புரியவில்லை.கடந்த ஆண்டு ஆக. மாதம் துவங்கிய பணிகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

இதே நிலை நீடித்தால் மத்திய அரசின் சார்பில் பிரதமரின் 'கரிப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவு பொருட்களை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நவ. மாதம் வரை எப்படி வழங்க முடியும்.எனவே புலம் பெயர் தொழிலாளர்கள் பணி புரியும் இடத்தில் ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X