பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திர நெல் நடவுக்கு பாய் நாற்றங்கால்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு இயந்திர நடவிற்கு நாற்றுக்களை வளர்க்க பாய் நாற்றங்கால் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்தாண்டு பெரியாறு அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருந்ததால் முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நவீன

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு இயந்திர நடவிற்கு நாற்றுக்களை வளர்க்க பாய் நாற்றங்கால் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்தாண்டு பெரியாறு அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருந்ததால் முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தில் இயந்திர நடவு சில ஆண்டிற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி நாற்றுகளை வளர்க்க பாய் நாற்றங்கால் அமைக்கின்றனர். சாதாரண நாற்றங்காலில் நாற்றுகள் வளர 25 நாட்கள் தேவைப்படும். பாய் நாற்றங்காலில் 15 நாட்கள் போதுமானது. எடுத்து நடவு செய்ய எளிதாக இருக்கும். இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு வேளாண் துறை ரூ. 5 ஆயிரம் மானியம் தருவதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X