பொது செய்தி

தமிழ்நாடு

சோளம் விளைச்சல் அதிகரித்தும் கட்டுபடியான விலை இல்லை

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
போடி : தேனி மாவட்டத்தில் சோளம் விளைச்சல் அதிகரித்தும் ஊரடங்கால் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உணவுக்கு பயன்படும் சோளம் பயிரிட்டுள்ளனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசனாகும். இரண்டு ஆண்டுகளுக்கு

போடி : தேனி மாவட்டத்தில் சோளம் விளைச்சல் அதிகரித்தும் ஊரடங்கால் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உணவுக்கு பயன்படும் சோளம் பயிரிட்டுள்ளனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசனாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்விளைச்சல் அதிகரித்து குவிண்டால்(100 கிலோ) ரூ. 2 ஆயிரத்தி 400 முதல் ரூ. 2 ஆயிரத்தி 500 வரை விலை போனது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் குவிண்டால் ரூ.ஆயிரத்தி 600 முதல் ரூ.ஆயிரத்தி 800 வரை விற்கப்பட்டது.

தற்போதைய ஊரடங்கிலும் வெளியூர்களில் தேவை குறைந்துள்ளதால் குவிண்டால் ரூ.ஆயிரத்தி 450 முதல் ரூ.ஆயிரத்தி 550 வரை விலை போகிறது. உரம் விலை, கூலித் தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ள நிலையில் சோளத்திற்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X