சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு கடன் நிறுவனங்கள் மிரட்டல் ஊரடங்கால் தவிப்போருக்கு சிக்கல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:ஊரடங்கால் வருவாய் இழந்து தவணை செலுத்த தவறியவர்களுக்கு ஜப்தி எச்சரிக்கை விடுத்து வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் அடாவடியில் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க 2020 மார்ச் 24ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தனியார் மற்றும் தொழில் துறையினர் கடன் தவணை செலுத்த ஆறு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.ஊரடங்கால் வருவாய் இழந்து தவித்தவர்களுக்கு இது

சென்னை:ஊரடங்கால் வருவாய் இழந்து தவணை செலுத்த தவறியவர்களுக்கு ஜப்தி எச்சரிக்கை விடுத்து வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் அடாவடியில் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க 2020 மார்ச் 24ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தனியார் மற்றும் தொழில் துறையினர் கடன் தவணை செலுத்த ஆறு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.

ஊரடங்கால் வருவாய் இழந்து தவித்தவர்களுக்கு இது ஆறுதலாக இருந்தது. ஆனால் 2021ல் கொரோனா இரண்டாவது அலை கடுமையாக தாக்கியது. இந்த சமயத்தில் மாநில அரசுகளே ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.இதனால் தவணை செலுத்த விலக்கு அளிக்கும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதனால் ஊரடங்கால் வருவாய் இழந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவணை செலுத்த முடியாத அளவுக்கு அவர்கள் தவிக்கின்றனர்.இது குறித்து வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கூறியதாவது: பொதுத்துறை தனியார் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் தவணை தவறியோரிடம் கடுமையாக நடந்து கொள்கின்றன. வருவாய் இழப்பால் தவணை தவறியோருக்கான எந்த சலுகையையும் அரசு வழங்கவில்லை.

தவணை தவறியவர்களுக்கு 'உங்கள் சொத்தை ஜப்தி செய்யப் போகிறோம்' என வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பி உள்ளன. கொரோனா தொற்று பரவலால் மன ரீதியாகவும் வருவாய் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களை இப்படி செய்யலாமா.இந்த விஷயத்தில் அரசு மவுனமாக இருந்தால் வீட்டுக் கடன் வாங்கிய பலர் வீடற்றவர்களாக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X