பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட அனுமதிக்கான கால அவகாசம் நீட்டிப்பா

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கருதி கட்டுமான திட்ட அனுமதியின் கால அவகாசத்தை ஓராண்டு வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நகர் ஊரமைப்பு சட்டப்படி கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான கால வரையறை ஐந்து ஆண்டுகளாகவும் அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப் படும் என விதிகள் திருத்தப்பட்டன. இவ்விதிகள் தற்போது அமலில்

சென்னை:ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கருதி கட்டுமான திட்ட அனுமதியின் கால அவகாசத்தை ஓராண்டு வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு சட்டப்படி கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான கால வரையறை ஐந்து ஆண்டுகளாகவும் அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கப் படும் என விதிகள் திருத்தப்பட்டன. இவ்விதிகள் தற்போது அமலில் உள்ளன.

கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது ஐந்தாண்டு மற்றும் எட்டாண்டு கால கெடு முடியும் திட்டங்களுக்கு ஆறு மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இது கட்டுமான துறைக்கு பேருதவியாக இருந்தது.இந்நிலையில் மே ஜூன் மாதங்களிலும் ஊரடங்கு நீடிக்கிறது. இந்த காலத்தில் காலக்கெடு முடியும் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் ராமபிரபு கூறியதாவது: ஊரடங்கால் கடந்த ஆண்டு போல தற்போதும் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு பணியாளர் பற்றாக்குறையும் பாதிப்பை அதிகப்படுத்தி உள்ளது.இதனால் கட்டுமான திட்ட அனுமதி கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X