பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு இலவசமாக வழங்க 12,627 டன் ரேஷன் அரிசி ஒதுக்கீடு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேனி : கொரோனா நெருக்கடியை சமாளிக்க தேனி மாவட்டத்திற்கு 12,627 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தினமும் உழைக்கும் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கி தாராளம் காட்டுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 4,11,615 ரேஷன் கார்டுதார்களுக்கு மாதம் தோறும் இலவச அரிசியாக

தேனி : கொரோனா நெருக்கடியை சமாளிக்க தேனி மாவட்டத்திற்கு 12,627 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் தினமும் உழைக்கும் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கி தாராளம் காட்டுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 4,11,615 ரேஷன் கார்டுதார்களுக்கு மாதம் தோறும் இலவச அரிசியாக 6613டன் வழங்கப்பட்டது. மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை, முன்னுரிமையற்ற ரேஷன்கார்டில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் மே, ஜூனுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் வழங்க வேண்டிய கூடுதல் அரிசியும், ஜூலைக்கான கூடுதல் அரிசியும் சேர்த்து இம் மாதம் வழங்கப்படுகிறது.இரு மாத அரிசி ஒதுக்கீடு வெளி மாவட்டங்களில் இருந்து லாரி, லாரியாக நுகர்பொருள் வாணிப கழத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கூடுதல் ஒதுக்கீடு அரிசி 6014 டன் சேர்த்து மொத்தம் 12,627 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 கிலோ முதல் அதிகபட்சம் 50 கிலோ வரை இலவச அரிசி பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X