பொது செய்தி

தமிழ்நாடு

சலவை தொழிலுக்கு அனுமதி கோரி மனு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:ஊரடங்கால் முடங்கியுள்ள சலவை தொழிலுக்கு அனுமதி கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு வழங்கப்பட்டது.இது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவையின் மாநில பொதுச்செயலர் பாலு அளித்த மனு:தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு அறிவித்த ஊரடங்கை சலவை தொழிலாளர்கள் முறையாக கடைபிடித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால் மட்டுமே உணவு என்ற நிலை

சென்னை:ஊரடங்கால் முடங்கியுள்ள சலவை தொழிலுக்கு அனுமதி கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு வழங்கப்பட்டது.

இது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவையின் மாநில பொதுச்செயலர் பாலு அளித்த மனு:தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு அறிவித்த ஊரடங்கை சலவை தொழிலாளர்கள் முறையாக கடைபிடித்து வருகின்றனர்.

அன்றாடம் உழைத்தால் மட்டுமே உணவு என்ற நிலை உள்ளது. கடை மற்றும் வீட்டு வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே சலவை தொழிலாளர்கள் நிலையங்கள் மற்றும் தள்ளுவண்டி இஸ்திரி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X