பொது செய்தி

தமிழ்நாடு

அவசியம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
இம்மாவட்டத்தில் கொரோனா 2வது அலை ஏப்ரலில் துவங்கி மே 17 ல் அதிகளவாக ஒருநாளில் பாதிப்பு 800 ஐ தாண்டியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. முன்னதாக அவர்களைஅரசு, தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்வதற்கென தாலுகாவிற்கு 2, 3 வாகனங்கள் வீதம் 108 ஆம்புலன்ஸ்கள் 10 ஒதுக்கப்பட்டன. இச் சேவை பாராட்டு பெற்றது.ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைகிறது. சில

இம்மாவட்டத்தில் கொரோனா 2வது அலை ஏப்ரலில் துவங்கி மே 17 ல் அதிகளவாக ஒருநாளில் பாதிப்பு 800 ஐ தாண்டியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. முன்னதாக அவர்களைஅரசு, தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்வதற்கென தாலுகாவிற்கு 2, 3 வாகனங்கள் வீதம் 108 ஆம்புலன்ஸ்கள் 10 ஒதுக்கப்பட்டன.

இச் சேவை பாராட்டு பெற்றது.ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைகிறது. சில நாட்களாக 400, 300, 250 என நோய் குறைந்து நேற்று முன்தினம் 180 ஆக இருந்தது நேற்று 212 ஆனது. இது மகிழ்ச்சி என்றாலும் நோய் பாதித்தவர்கள் வீட்டு தனிமையில் இருக்கின்றனர். நேற்று நிலவரப்படி மாவட்டத்தில் 2661 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் 560 பேர் மட்டுமே மருத்துவமனைகள், மையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். 702 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் 2101 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இவர்களுக்கு தனிஅறை, கழிப்பறை உள்ளிட்ட அதற்கான வசதி உள்ளதா என ஆராயமல் இருக்க அனுமதிக்கின்றனர். வெளியில் செல்வதையும் கண்காணிப்பதில்லை.

இது நோய் பரவலை அதிகரிக்க செய்யும் வழியாகும். இந்நிலையில் ஜூன் 9ல் பாதிப்பு 180 ஆக இருந்தும் ஒருவர்கூட 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வில்லை. இதற்கு சிலர் வீட்டு தனிமையும், சிலர் ஆம்புலன்சை தவிர்த்து நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில்கொரோனாவை கட்டுப்படுத்தி பாதிப்பு மேலும் குறைய வேண்டுமானால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகள், மையங்களில் சிகிச்சை பெறுவது அவசியம். நோய் குணமடைந்த பின் 14 நாள் வீட்டுத்தனிமையில் இருப்பது சிறந்ததாகும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்றுகிறார்களா என சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X