பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்து தவிர்ப்பது எப்படி! மருத்துவமனைகளுக்கு விழிப்புணர்வு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வடமாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு, பல நோயாளிகள் இறந்துள்ளனர். நம் மாநிலத்தில் எவ்விதமான தீ விபத்து சம்பவங்களும் நடக்கக் கூடாது

கோவை:கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வடமாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு, பல நோயாளிகள் இறந்துள்ளனர். நம் மாநிலத்தில் எவ்விதமான தீ விபத்து சம்பவங்களும் நடக்கக் கூடாது என்று தீயணைப்புத்துறை டி.ஜி.பி., கரன்சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை மேற்கு மண்டலம் சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட ஒன்பது மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய தீ பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தொடர்பான இணையவழி கலந்துரையாடல் நேற்று நடந்தது.தீயணைப்பு துறை மேற்கு மண்டல துணை இயக்குனர் சத்தியநாராயண் தலைமை வகித்தார். மருத்துவமனைகளில் தீயணைப்பு சாதனங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பராமரிப்பு, மின்சார தீ விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் டாக்டர்கள், மருத்துவமனை பாதுகாப்புஅதிகாரிகள், தீயணைப்பு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X