பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையங்களில் பரிசோதனை வசதி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்களிலும் கொரோனா கண்டறியப்பட்டவர்கள், அறிகுறி உள்ளோர், சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டோருக்கு ரத்தத்தில் எச்.பி.,அளவு, சர்க்கரை, வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள், நோய் பாதிப்பு, சர்க்கரை அளவு சாப்பாட்டிற்கு முன், பின் கிட்னி செயல்பாடு, சிறுநீரில் உப்பு அளவு உட்பட 10 வகையான பரிசோதனைகள்

தேனி : தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்களிலும் கொரோனா கண்டறியப்பட்டவர்கள், அறிகுறி உள்ளோர், சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டோருக்கு ரத்தத்தில் எச்.பி.,அளவு, சர்க்கரை, வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள், நோய் பாதிப்பு, சர்க்கரை அளவு சாப்பாட்டிற்கு முன், பின் கிட்னி செயல்பாடு, சிறுநீரில் உப்பு அளவு உட்பட 10 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் சளி, காய்ச்சல், சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ள அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X