பொது செய்தி

தமிழ்நாடு

25 சதவீத தொழிலாளர் அனுமதி ஏற்றுமதி நிறுவனங்கள் மகிழ்ச்சி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஜூன் 14ம் தேதி முதல் 25 சதவீத தொழிலாளருடன் பணிபுரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் சார் நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளருடன் இயங்க துவங்கின. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21ம் தேதி வரை

திருப்பூர்:ஜூன் 14ம் தேதி முதல் 25 சதவீத தொழிலாளருடன் பணிபுரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் சார் நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளருடன் இயங்க துவங்கின. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நேற்று தமிழக அரசு அறிவித்தது. கோவை திருப்பூர் ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில் ஏற்றுமதி மற்றும் சார் நிறுவனங்கள் ஜூன்14ம் தேதி முதல் 25 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது

.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில் ''25 சதவீத தொழிலாளருடன் இயங்க அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் நிட்டிங் டையிங் பிரின்டிங் என எல்லா துறைகளும் இயக்கத்துக்கு வரும்; ஏற்றுமதி நிறுவனங்கள் சாம்பிள் ஆடை தயாரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இ.எஸ்.ஐ. மூலம் அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X