சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களை திறக்க முஸ்லிம் லீக் வேண்டுகோள்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்' என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பலர் தேவையின்றி சுற்றியதால், கொரோனா அதிகரித்தது. எனவே, மே 24 முதல் தளர்வுகள் இல்லாத முழு

சென்னை:பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்' என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பலர் தேவையின்றி சுற்றியதால், கொரோனா அதிகரித்தது. எனவே, மே 24 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில், அனைத்து வழிபாட்டு தலங்களும், ஏப்., 26 முதல் மூடப்பட்டுள்ளன. மே, 10 முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலே முடங்கி இருக்கின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது, சென்னை உட்பட, 27 மாவட்டங்களில், தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.எனவே, இம்மாவட்டங்களில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க, தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும்.அதேபோல், டாஸ்மாக் கடைகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் மூடுவிழா நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X