பொது செய்தி

தமிழ்நாடு

'ஒக்கி', 'கஜா' புயலில் பணியாற்றிய சுங்கரா! மாநகராட்சி கமிஷனராக 14ல் பொறுப்பேற்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:'ஒக்கி' மற்றும் 'கஜா' புயலில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி கமிஷனராக, வரும், 14ம் தேதி பொறுப்பேற்கிறார்.கோவை மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபால் சுங்கரா, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தார். 2015ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அவர், பயிற்சிக்கு பின், 2017, ஜூலை முதல் தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில்

கோவை:'ஒக்கி' மற்றும் 'கஜா' புயலில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி கமிஷனராக, வரும், 14ம் தேதி பொறுப்பேற்கிறார்.கோவை மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபால் சுங்கரா, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தார். 2015ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அவர், பயிற்சிக்கு பின், 2017, ஜூலை முதல் தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.தமிழகத்தை 'ஒக்கி' மற்றும் கஜா புயல்கள் தாக்கியபோது, பேரிடர் மேலாண்மையில் தீவிரமாக பணியாற்றிய அனுபவம் இருந்ததால், சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த சமயத்தில், தெற்கு மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது, கோவை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது, 31.மீனவர்கள் மறுவாழ்வுகன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் சப்-கலெக்டராக பணியாற்றி சமயத்தில், 'ஒக்கி' புயல் மீட்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, 7,000 பேர் பங்கேற்ற ரயில் மறியல் மற்றும் ரோடு மறியல் போராட்டத்தை கையாண்டு, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார். காணாமல் போன மீனவர்கள் மற்றும் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரில், 109 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். புயல் தாக்கியபோது, எவ்வித சேதாரமும் ஏற்படாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், மீனவர்களின் பாராட்டுகளை பெற்றார்.நேரடி களப்பணிகடந்த, 2018ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் பெருஞ்சாணி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதனால் பளூகல், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை, இடுப்பளவு தண்ணீருக்குள் நின்று காப்பாற்றினார்.கடந்த, 2019ல் கஜா புயல் நிவாரணப் பணிக்கு கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர், புதுக்கோட்டையில் பணியாற்றிய இவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்கவும், வீடிழந்தவர்களுக்கு வீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.ராஜாகோபால் சுங்கராவிடம் பேசியபோது, ''கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாக, கோவைக்கான கண்காணிப்பு அலுவலர்கள் சித்திக் மற்றும் வீரராகவராவ் ஆகியோரிடம் பேசியுள்ளேன். இதுவரை செய்துள்ள பணிகளை விளக்கியதோடு, அறிவுரை வழங்கியிருக்கின்றனர். சென்னையில் பணியாற்றிய அனுபவம் கை கொடுக்கும். வரும், 14ல் பொறுப்பேற்கிறேன்,'' என்றார்.இவரது மனைவி லட்சுமி பவ்யா ஐ.ஏ.எஸ்., அதிகாரி; மேற்குவங்கத்தில் பணிபுரிகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X