சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி விழாவில் சமூக இடைவெளி இல்லை முண்டியடித்த மக்களால் கொரோனா அபாயம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
வால்பாறை:நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்து நின்றனர்.கோவை மாவட்டம் வால்பாறையில் கிரீன்ஹில்ஸ் கலையரங்கில் தி.மு.க. சார்பில் ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன்
 உதயநிதி விழாவில் சமூக இடைவெளி இல்லை முண்டியடித்த மக்களால் கொரோனா அபாயம்

வால்பாறை:நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்து நின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கிரீன்ஹில்ஸ் கலையரங்கில் தி.மு.க. சார்பில் ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உதயநிதி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினரும் பொதுமக்களும் திரண்டனர்.

இதனால் சிறிய கலையரங்கில் மக்கள் கூட்டம் முண்டியடித்தது. மேடையில் உதயநிதியை சந்திக்க கூட்டம் திரண்டது. பலர் செல்பி எடுக்க மேடையில் புகுந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சமூக இடைவெளி இல்லாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X