அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓராண்டில் வேஷம் மாறியதோ... 'டாஸ்மாக்' திறப்புக்கு வானதி சுளீர் 'டுவீட்'

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:'எல்லாம் நடிப்பா... போட்ட வேஷம் மாறியதோ... இப்போது அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்' என, டாஸ்மாக் திறக்க அனுமதித்த முதல்வர் மற்றும் கனிமொழிக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் ஜூன், 14 முதல், 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தளர்வில், 'டாஸ்மாக்' கடைகளும் இடம்பெற்றுள்ளன. வரும், 14ம்

கோவை:'எல்லாம் நடிப்பா... போட்ட வேஷம் மாறியதோ... இப்போது அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்' என, டாஸ்மாக் திறக்க அனுமதித்த முதல்வர் மற்றும் கனிமொழிக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் ஜூன், 14 முதல், 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தளர்வில், 'டாஸ்மாக்' கடைகளும் இடம்பெற்றுள்ளன. வரும், 14ம் தேதி முதல், 27 மாவட்டங்களில், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை டாஸ்மாக் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.இதை கண்டித்து, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு கருப்புக்கொடி ஏந்தியபடி, 'ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில்...இறப்பு நுாற்றுக்கணக்கில்... டாஸ்மாக் திறப்பு அவசியமா?' என்று கேட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.அதனுடன், 'ஒரு வருடத்தில் முதல்வர் போட்ட வேஷம் மாறியதோ... ஒலித்த கோஷம் மறந்ததோ... இதுதான் விடியலா?' என, சாடியுள்ளார்.இதேபோன்று, எம்.பி., கனிமொழி டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராடும் புகைப்படங்களை பதிவிட்டு, 'இப்போது அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்?' என, வானதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dominic - mumbai,இந்தியா
12-ஜூன்-202111:31:48 IST Report Abuse
Dominic Where z BJP ruled govts , following prohibition, first followin ur governing states then come to Tamil nad.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X