சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி சிகிச்சை: மருத்துவமனைக்கு 'சீல்'

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், அனுமதி பெறாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.திருப்பூர், காந்தி நகர், சாமுண்டிபுரம் மெயின் ரோட்டில், 'தஞ்சை மருத்துவமனை' என்ற தனியார் கிளினிக், முறையான அனுமதி பெறாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது.இதனால், மருத்துவம்
 அனுமதியின்றி சிகிச்சை: மருத்துவமனைக்கு 'சீல்'

திருப்பூர்:திருப்பூரில், அனுமதி பெறாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.திருப்பூர், காந்தி நகர், சாமுண்டிபுரம் மெயின் ரோட்டில், 'தஞ்சை மருத்துவமனை' என்ற தனியார் கிளினிக், முறையான அனுமதி பெறாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது.இதனால், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி உத்தரவின்படி, மருந்து ஆய்வாளர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், எவ்வித அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனால், மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சுகாதாரத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X